பிஸி பேளா பாத் (4)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி - ஒரு கப்

துவரம் பருப்பு - கால் கப்

புளி - ஒரு எலுமிச்சை அளவு

கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி

உருளைக்கிழங்கு - 2

தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி

கடுகு - அரைத் தேக்கரண்டி

வெந்தயம் - கால் தேக்கரண்டி

தனியா - ஒரு தேக்கரண்டி

பட்டை - ஒரு சிறிய துண்டு

கிராம்பு - 2

மிளகாய் வற்றல் - 5

பெருங்காயம் - கால் தேக்கரண்டி

உப்பு - 1 தேக்கரண்டி

செய்முறை:

புளியை சிறிது தண்ணீர் விட்டு ஊறவைக்கவும். உருளைக்கிழங்கினை சிறுதுண்டுகளாய் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, தனியா, உளுத்தம்பருப்பு, பட்டை, கிராம்பு, வெந்தயம், மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை சிவப்பாக வறுத்துக் கொள்ளவும்.

வறுத்தவற்றை தேங்காய்த் துருவலுடன் சேர்த்து அம்மியிலோ, மிக்ஸியிலோ இட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் விட்டு, தண்ணீர் கொதித்தவுடன் துவரம் பருப்பினைப் போட்டு சிறிது வெந்த பிறகு அரிசியைப் போடவும்.

அரிசி பாதி வெந்தவுடன் நறுக்கிய உருளைக்கிழங்கினைப் போடவும். அதுவும் வெந்தவுடன் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை ஊற்றி, அரைத்து வைத்துள்ள மசாலாவையும் போட்டு கொதிக்க விடவும்.

அடிபிடிக்காதவாறு அவ்வப்போது கிளறி விட்டுக் கொண்டே இருக்கவும்.

சாதம் நன்கு வெந்து வந்தபிறகு இறக்கி கடுகினை தாளித்துக் கொட்டவும்.

குறிப்புகள்: