பிஸி பேளா பாத்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - அரைப்படி

துவரம்பருப்பு - அரைப்படி

தனியா - 2 மேசைக்கரண்டி

தேங்காய் - கால் மூடி

மிளகாய் - 8

உப்பு - தேவையான அளவு

பெருங்காயம் - சிறிதளவு

நெய் - 100 கிராம்

புளி - எலுமிச்சை அளவு

கறிவேப்பிலை - சிறிது

கொத்தமல்லி - சிறிது

கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி

சின்ன வெங்காயம் - கால் கிலோ

உளுந்து - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

முதலில் பச்சரிசி, துவரம்பருப்பு இரண்டையும் குக்கரில் பொலபொலவென்று வேகவைத்து எடுக்கவும்.

மிளகாய், தனியா, கடலைப்பருப்பு, பெருங்காயம் இவற்றை நன்கு வறுத்து தேங்காய் துருவலோடு சேர்த்து அரைக்கவும்.

அடிக்கனமான பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து போட்டுத் தாளிக்கவும்.

பிறகு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பிறகு வெந்த சாதக் கலவையை சேர்த்துக் கிளறவும்.

பின் அரை டம்ளர் புளிக்கரைசலை ஊற்றவும். உப்பு சேர்த்து பிறகு தேங்காய் விழுது சேர்த்து கிளறி 10 நிமிடம் இளஞ்சூட்டில் வைக்கவும்.

பிறகு கறிவேப்பிலை, கொத்தமல்லி இழை தூவவும். நெய் விடவும். பிறகு இறக்கி சூடாகப் பரிமாறவும். இது சாப்பிட ருசியாக இருக்கும்.

குறிப்புகள்: