பிஸிபேளா பாத் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கடலை பருப்பு - 100 கிராம்

உளுத்தம் பருப்பு - 100 கிராம்

தனியா - 200 கிராம்

மிளகாய் வத்தல் - 100 கிராம்

பெருங்காயம் - 1 துண்டு

கொப்பரை தேங்காய் - 2 துண்டு (துருவல்)

லவங்க பட்டை - 4 (அ) 5 துண்டு

கிராம்பு - 4

ஏலக்காய் - 2

எண்ணெய் - 2 ½ தேக்கரண்டி

அரிசி - 200 கிராம்

துவரம் பருப்பு - 200 கிராம்

நல்லெண்ணெய் - 150 மில்லி

நெய் - 150 மில்லி

பிஸிபேளாபாத் பொடி - 4 மேஜை கரண்டி

உப்பு - தேவையான அளவு

புளி கரைசல் - 1 கரண்டி

கேரட் - 100 கிராம்

பீன்ஸ் - 100 கிராம்

டபுள் பீன்ஸ் - 50 கிராம்

பட்டாணி - 100 கிராம்

சிறிய வெங்காயம் - 250 கிராம்

குடைமிளகாய் - 1 பெரியது

செய்முறை:

-----------------------------------------

பிஸிபேளா பாத் பொடி:

---------------------------------------

முதலில் வெறும் வாணலியில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, தனியா இவற்றை வறுத்துக் கொள்ளவேண்டும்.

பிறகு இரண்டு தேக்கரண்டி எண்ணெய் விட்டு லவங்க பட்டை, கிராம்பு, ஏலக்காய், பெருங்காயம் முதலியவற்றை வறுத்துக் கொள்ளவும்.

½ தேக்கரண்டி எண்ணெய் விட்டு மிளகாயை வறுத்து வாணலியை அணைத்து விட்டு கொப்பரை தேங்காயை துருவலை சூடு பண்ணவும்.

மிக்ஸியில் முதலில் பருப்புகளையும், பிறகு தனியாவையும், கடைசியில் மிளகாய்,லவங்கபட்டை,

ஏலக்காய், கிராம்பு, கொப்பரை தேங்காய் துருவல் போட்டு பொடி செய்யவும்.

பிஸிபேளா பாத் பொடி ரெடி. இதை காற்று புகாத டப்பாவில் போட்டு குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.

தேவைபடும் பொழுது உபயோக படுத்தலாம்.

----------------------------------

பிஸிபேளா பாத்:

-------------------------------------

கேரட், பீன்ஸ், குடைமிளகாயை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

வெங்காயத்தை உரித்துக் கொள்ளவும்.

அரிசி,பருப்பு,இரண்டையும் ஒன்றாக களைந்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் அரிசி,பருப்பு இரண்டையும் 800கிராம் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைக்கவும்

கேரட்,பீன்ஸ், டபுள்பீன்ஸ், பட்டாணி இவைகளை மற்றொரு பாத்திரத்தில் வைத்து குக்கரை மூடவும்.

4 விசில் வந்தவுடன் குக்கரை இறக்கவும்.

ஒரு வாணலியில் தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன்,வெங்காயம், குடைமிளகாய்,

இவைகளை நன்கு வதக்கவும்.

இவற்றுடன் வேகவைத்த காய்கள், புளி தண்ணீர், பிஸிபேளாபாத் பொடி, மஞ்சள் பொடி,உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து 5நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

இவற்றுடன் வேக வைத்த சாதத்தை மசித்து, நன்றாக கலந்நு எண்ணெய்,நெய்,சேர்த்து கிளற வேண்டும்.

ஐந்து நிமிடங்கள் கைவிடாமல் கிளறிய பின் அடுப்பில் இருந்து இறக்கவும்.

கடைசியாக எண்ணெயயையும், நெய்யுயைம், சூடு பண்ணி கருவேப்பிலை தாளித்து சாதத்தின் மீது கொட்டவும்.

குறிப்புகள்:

சூப்பர் சைட் டிஷ் சிப்ஸ்.

முதலில் பிஸிபேளா பாத் பொடி செய்து கொண்டு பிறகு சாதம் தயார் செய்யவும்