பிஸிபேளா பாத்
தேவையான பொருட்கள்:
அரிசி - 1/4 கிலோ
துவரம் பருப்பு - 150 கிராம்
பச்சை வேர்க்கடலை - 3/4 கப்
புளி - ஒரு எழுமிச்சம் பழ அளவு
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
நெய் - 3/4 கப் (150 மில்லி)
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப.
--------------------------
வறுத்து பொடிக்க:
----------------------
காய்ந்த மிளகாய் - 10
தனியா - 1 மேசைக்கரண்டி
பொட்டுக்கடலை - 2 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு - 2 மேசைக்கரண்டி
(கொப்பரை) தேங்காய் துருவல் - 3 மேசைக்கரண்டி.
------------------------------
மசாலா பொடிக்கு:
-----------------------
கசகசா - 1 தேக்கரண்டி
மராட்டி மொக்கு - 2
பட்டை - சிறிது
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
-------------------------
தாளிக்க:
----------------------------
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை:
அரிசியையும் பருப்பையும் ஒன்றாக கலந்து கழுவி, ஒன்றுக்கு இரண்டரை மடங்கு தண்ணீர் வைத்து குக்கரில் 3 விசில் விட்டு குழைய வேக விட்டு எடுக்கவும்.
வறுக்கக் கொடுத்துள்ளவைகளை தனியாகவும், மசாலா பொடிக்கு உள்ளவற்றை தனியாகவும் எண்ணெயில் வறுத்து தனித்தனியாக பொடித்து வைக்கவும்.
புளியை 2 டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைக்கவும். வேர்க்கடலையை தனியாக வேக வைக்கவும்.
புளித்தண்ணீரை சிறிது நேரம் கொதிக்க விட்டு, புளி வாசம் போனதும், வேக வைத்த சாதம், நிலக்கடலை, 1/2 கப் நெய், உப்பு, வறுத்த பொடி சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்ததும் மீதி நெய்யில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து சாதத்தில் கொட்டி, மசாலா பொடி தூவி, கிளறி இறக்கவும்.
குறிப்புகள்:
சாம்பார் சாதமே கொஞ்சம் மசாலா வாசனையுடனிருக்கும். தொட்டுக்கொள்ள சிப்ஸ் நன்றாக இருக்கும்.