பிஸிபேளாபாத் (4)
தேவையான பொருட்கள்:
பச்சை அரிசி - கால்கிலோ
து.பருப்பு - 100 கிராம்
சிறிய காரட் - ஒன்று
உருளைக்கிழங்கு - 2
பீன்ஸ் - 50 கிராம்
முருங்கைக்காய் - 2
சாம்பார் வெங்காயம் - 100 கிராம்
தக்காளி - 2 சிறியது
பச்சைமிளகாய் - 5
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - 3
ஏலக்காய் - 2
முந்திரிபருப்பு - 10
பிரிஞ்சி இலை - 1
புளி - எலும்பிச்சை அளவு
-----------------------------------------
வறுத்து அரைக்க
--------------------------------------------
தனியா - 3 தேக்கரண்டி
து.பருப்பு - 1 தேக்கரண்டி
கா.பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகு - 5
சீரகம் - 1 தேக்கரண்டி
வெந்தயம் - அரைத் தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 6
செய்முறை:
மேலே வறுத்து அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ளப் பொருட்களை வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
அரை மூடி தேங்காயைத் துருவிக் கொள்ளவும். காய்கள் அனைத்தையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு, கடுகு தாளிக்கவும். பிறகு அதில் நறுக்கின வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை போட்டு சற்று வதக்கி, பிறகு அனைத்து மசாலாப் பொருட்களையும் அதில் சேர்க்கவும்.
சற்று வதங்கியவுடன் நறுக்கின காய்கறிகளைச் சேர்த்து மேலும் வதக்கவும்.
பிறகு புளியைக் கரைத்து ஊற்றி, அரிசி, பருப்பு, அரைத்த மசாலா, மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயம் மற்றும் துருவின தேங்காயைச் சேர்த்து கிளறி, சாதம் குழையும் அளவிற்கு தண்ணீர் விட்டு குக்கரை மூடி வேகவிடவும்.
மூன்று அல்லது நான்கு விசில் வரும் வரை வேகவிடவும்.
சற்று குழைவாக வெந்தது பார்த்து இறக்கவும்.
குறிப்புகள்:
வெங்காயப் பச்சடியுடன் பரிமாறவும்.