பிஸிபேளாபாத் (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி - 2 கப்

துவரம் பருப்பு - ஒரு கப்

வெங்காயம் - ஒன்று

காரட் - ஒன்று

உருளைக்கிழங்கு - 2

பீன்ஸ் (நறுக்கியது) - ஒரு கப்

பட்டாணி - ஒரு கப்

பெரிய தக்காளி - ஒன்று

மஞ்சள் பொடி - ஒரு தேக்கரண்டி

சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி

புளி தண்ணீர் - ஒரு கப்

நெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

----------------------------------------

மசாலா பொடி தயாரிக்க (இவை அனைத்தயும் வறுத்து அரைத்துக் கொள்ளவும்):

--------------------------------------

துருவிய தேங்காய் - ஒரு சிறிய கப்

வெந்தயம் - 1/2 தேக்கரண்டி

தனியா - ஒரு தேக்கரண்டி

துவரம் பருப்பு - 2 தேக்கரண்டி

கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி

சிகப்பு மிளகாய் - 3

--------------------------------

தாளிக்க:

---------------------------------

கிராம்பு - ஒன்று

ஏலம் - 2

கடுகு - ஒரு தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

கொத்தமல்லி - சிறிது

பச்சை மிளகாய் - 2

செய்முறை:

இரண்டு கப் அரிசிக்கு 5 கப் தண்ணீர் விட்டு சாதம் வைக்கவும். இதற்கிடையில், பருப்பை வேக விடவும்.

சாம்பார் செய்முறை:

புளி தண்ணீரில் சாம்பார் பொடி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

ஒரு கொதி வந்ததும், காய்கறிகளை போட்டு வேக விடவும்.

மறுபக்கத்தில், ஒரு கடாயில், ஒரு தேக்கரண்டி நெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், கிராம்பு, ஏலம் தாளித்து, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் வதங்கிய பின், புளி தண்ணீரில் வெந்து கொண்டிருக்கும் மற்ற காய்களுடன் சேர்க்கவும். கொத்தமல்லி சேர்க்கவும்.

பிறகு வெந்த பருப்பை சேர்த்து, அரைத்த விழுதையும் சேர்த்து கொதிக்கவிடவும். தேவையான உப்பை போடவும்.

குழைந்த சாதத்துடன் குழம்பை சேர்த்து நன்கு கிளறவும். இறுதியில் வாசனைக்கேற்ப தேவையான நெய் ஊற்றவும்

குறிப்புகள்: