பிஸிபேளாபாத்
தேவையான பொருட்கள்:
அரிசி - ஒரு டம்ளர் (வடித்து கொள்ளவும்)
-----------------------------------------
வேகவைத்து கொள்ளவும்:
---------------------------------------------
துவரம் பருப்பு - முக்கால் கப்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
வேர்க்கடலை - அரை கப் (வேகவைத்து கொள்ளவும்)
உப்பு - தாளிக்க
-------------------------------------
தாளிக்க:
--------------------------------------
நெய் - இரண்டு மேசைக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - கொஞ்சம்
சின்ன வெங்காயம் - ஐந்து
பீன்ஸ் - ஐந்து
கேரட் - அரை பாகம் (பொடியாக நறுக்கவும்)
தக்காளி - ஒன்று
-------------------------------------
பொடி தயாரிக்க:
------------------------------------
கொப்பரை தேங்காய் துருவல் - இரண்டு மேசைக்கரண்டி
பொட்டுக்கடலை - ஒரு மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
தனியா - ஒரு மேசைக்கரண்டி
பெருங்காயம் - இரு சிறிய துண்டு
காய்ந்த மிளகாய் - ஐந்து
கிராம்பு - மூன்று
பட்டை - ஒரு துண்டு
வெந்தயம் - கால் தேக்கரண்டி
கசகசா - கொஞ்சம்
ஏலக்காய் - ஒன்று
நெய் - மூன்று மேசைக்கரண்டி (கடைசியில் கலக்க)
புளி - ஒரு லெமென் சைஸ்
செய்முறை:
பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து மசித்து கொள்ளவும். சாதத்தை வடித்து வைக்கவும். வேர்க்கடலையை வேகவைத்து வைக்கவும்.
பொடி வகைகளை எண்ணெயில் வதக்கி ஆறியதும் பொடித்து கொள்ளவேண்டும்.
நெய்யில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம், கேரட், பீன்ஸ் போட்டு வதக்கி, புளியை இரண்டு கப் தண்ணீரில் போட்டு கரைத்து ஊற்றவும்,
பொடித்த பொடியும் போட்டு கொதிக்கவிடவும். காய்கறிகள் வெந்ததும் வேர்க்கடலையை சேர்க்கவும். சாதம், வேக வைத்து மசித்த பருப்பையும் சேர்த்து கிளறவும்.
நன்கு கிளறி கடைசியில் நெய்யையும் போட்டு கிளறவும்.
குறிப்புகள்:
இந்த பொடியை நிறைய திரித்து வைத்து பிரிட்ஜில் வைத்து கொண்டால் தேவைக்கு உபயோகப்படுத்தலாம்.