பிசிபேளாபாத் (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 டம்ளர்

துவரம் பருப்பு - 3/4 டம்ளர்

முருங்கைக்காய் - 1

கத்தரிக்காய் - 2

புளி - எலுமிச்சை அளவு

மஞ்சள்பொடி - 1/4 டீஸ்பூன்

உப்பு - சுவைக்கு

மல்லி இலை - சிறிது

பெருங்காயம் - சுண்டைக்காய் அளவு

தக்காளி - 3

வெங்காயம் - 2

சாம்பார்பொடி - 2 டேபிள்ஸ்பூன்

வறுத்து அரைக்க:

முழு தனியா - 2 டீஸ்பூன்

வரமிளகாய் - 4

சீரகம் - 1/2 டீஸ்பூன்

மிளகு - 1/4 டீஸ்பூன்

கடலைப்பருப்பு - 1 கைப்பிடி

தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்

பட்டை - சிறுதுண்டு

கிராம்பு - 2

ஏலம் - 2

-----------------------

தாளிக்க:

--------------------

கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை - தாளிக்க

வெந்தயம் - 1 பின்ச்

எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்

சாம்பார் வெங்காயம் - 10

நெய் - 3 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

குக்கரில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, அரிசி, பருப்பு, பெருங்காயம், மஞ்சள்பொடி ஆகியவற்றை குழைவாக வேக வைக்கவும்.

வறுத்து அரைக்க வேண்டியவற்றை சிறிது எண்ணெயில் வறுத்து நீர் விட்டு கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்.

காய்களை நறுக்கி மஞ்சள் பொடி சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும்.

அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.

நெய்யில் சாம்பார் வெங்காயத்தை வதக்கி மீதமிருக்கும் நெய்யுடன் சேர்க்கவும்.

புளி நீரையும் சேர்க்கவும்.

கொதிக்கும் பொழுது சாம்பார் பொடி கரைத்து சேர்க்கவும்.

நன்கு கொதி வந்ததும்,அடுப்பை சிம்மில் வைக்கவும்.

எண்ணெயில் தாளிக்க வேண்டியவற்றை தாளித்து சேர்த்துக்கிளறி இறக்கவும்

பறிமாறும் பொழுது துளி நெய் விட்டு வடை, அப்பளம், வத்தல், வடகம் போன்றவற்றுடன் பரிமாறவும்.

குறிப்புகள்:

இந்த குறிப்பும் அநேக ஸ்னேகிதிகள் கொடுத்த குறிப்புதான். கீழ்க்கண்ட முறையில் நாங்கள் செய்வோம். மிகவும் சுவையாக இருக்கும்.