பிசிபேளாபாத் (1)
தேவையான பொருட்கள்:
சாதம் - இரண்டு கப்
துவரம் பருப்பு - ஒரு கப்
மஞ்சள் தூள் - ஒரு பின்ச்
மிளகாய் தூள் - இரண்டு தேக்கரண்டி
காய்கறி கலவை - தேவையான அளவு
பெருங்காயம் - விருப்பமான அளவு
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - ஒன்று
புளி - ஒரு தேக்கரண்டி
நெய் - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு, உளுந்தம் பருப்பு - தேவையான அளவு
கறிவேப்பில்லை, கொத்தமல்லி - தேவையான அளவு
செய்முறை:
காய்களை பொடியாக நறுக்கி வைக்கவும். சாதம் இரண்டு கப் வடித்து வைக்கவும்.
பருப்பை கழுவி அதனுடன் வெங்காயம், தக்காளி, காய்கறி கலவை, மஞ்சள் தூள், சிறிது எண்ணெய் சேர்த்து நான்கு விசில் வரும் வரை குக்கரில் வேக வைக்கவும்.
வெந்த பருப்பு காய்களுடன் சாதத்தை சேர்த்து உப்பு, மிளகாய் தூள், புளி சேர்த்து மீண்டும் மூடி ஒரு விசில் வந்ததும் நிறுத்தி பின் சாதத்துடன் விருப்பமான அளவு நெய் சேர்த்து கிளறவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து கடுகு சேர்த்து வெடித்ததும் கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து சாதத்துடன் சேர்க்கவும். (பெருங்காயம் அதிகம் சேர்ப்பதால் கூடுதல் மணமும் சுவையும் கிடைக்கும்.)
மீண்டும் கொஞ்சம் நெய் சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் கழித்து அடுப்பை நிறுத்தவும்.