பாலக் ரைஸ் (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி - 200 கிராம்

பாலக் கீரை - ஒரு கட்டு

வெங்காயம் - 1 பொடியாக நறுக்கவும்

பூண்டு பேஸ்ட் - கால் டீஸ்பூன்

இஞ்சித் துருவல், சோம்பு, கரம் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 3

கிராம்பு - 2

நெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அரிசியை எப்போதும் போல் குக்கரில் வைத்து எடுத்துக் கொள்ளவும்.

கடாயில் நெய் விட்டு சோம்பு, கிராம்பு தாளித்து பூண்டு பேஸ்ட், இஞ்சித் துருவல், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

சிறிது வதங்கியவுடன் வெங்காயம், கீரை சேர்த்து மேலும் வதக்கி, கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து, சாப்பாட்டுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

குறிப்புகள்: