பாலக் ரைஸ் (1)
தேவையான பொருட்கள்:
அரிசி - ஒரு கப்
கீரை - ஒரு கப் [ஸ்பினாச் / அரைக்கீரை / சிறுகீரை]
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
மஞ்சள் தூள் - சிறிது
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
பூண்டு - 3 பல்
சோம்பு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
காய்கறி கலவை [உருளை, கேரட், காலிஃப்ளவர்] - தேவையான அளவு
நெய் - 3 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி [விரும்பினால்]
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
காய்கறிகளை நறுக்கவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைக்கவும். பூண்டை தோல் நீக்கவும். கீரையை சுத்தம் செய்து வைக்கவும். அரிசியை ஊற வைக்கவும்.
கடாயில் ஒரு தேக்கரண்டி எண்னெய் விட்டு சோம்பு தாளித்து பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கி அதில் கீரையை சேர்த்து நன்றாக வதக்கவும். இதை மிக்ஸியில் அரைக்கவும்.
மீண்டும் மீதம் உள்ள எண்ணெய் நெய் சேர்த்து காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
இதில் நறுக்கிய காய்கறிகள் சேர்த்து வதக்கவும்.
காய்கள் வதங்கியதும் அரைத்த கீரை விழுதை சேர்த்து கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
கீரை நன்றாக வதங்கி, மசால் வாசம் போனதும் 2 கப் நீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
நீர் கொதித்ததும் அதில் எலுமிச்சை சாறு விட்டு அரிசியை சேர்த்து கொதி வந்ததும் சிறுதீயில் மூடி சாதம் வெந்ததும் எடுக்கவும். சுவையான பாலக் ரைஸ் தயார்.