பாலக் ரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாலக் கீரை - 3 கப்

உதிரியாக வடித்த சாதம் - 4 கப்

வெங்காயம் - 2

பச்சைமிளகாய் - 2

தக்காளி - 1

ஜீரகம் - 1 ஸ்பூன்

கடலை பருப்பு - 1 ஸ்பூன்

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

தனியா தூள் - 1 ஸ்பூன்

கரம் மசாலா - அரை ஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பாலக்கீரையை சுத்தப்படுத்தி பொடியாக நறுக்கிவைத்துக்கொள்ளவும், வெங்காயம் பச்சைமிளகாய், தக்காளியை நறுக்கிவைத்து கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஜீரகம் மற்றும் கடலைபருப்பு போட்டு தாளிக்கவும்.

அதில் வெங்காயம் மற்றும் பச்சைமிளகாயை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

அதில் தக்காளி மற்றும் பாலக் கீரையும் போட்டு நன்கு வதக்கி சிறிது நேரம் தீயை குறைத்து வைத்து மூடிவைக்கவும்.

கீரை நன்கு வெந்ததும் அதில் மிளகாய் தூள்,தனியா தூள்,கரம் மசாலா தேவையான போட்டு வதக்கி மேலும் சிறிது நேரம் மூடிவைக்கவும்.

மசாலா வாசனை போனதும் வடித்த சாதத்தை போட்டு நன்கு கிளறி அடுப்பை அணைத்துவிடவும்.

குறிப்புகள்:

இந்த சாதத்திற்க்கு உருளை கிழங்கு பிரை நல்ல காம்பினேஷன்.