பாலக் புலாவ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாலக் கீரை - ஒரு கட்டு

பச்சரிசி அல்லது பாஸ்மதி அரிசி - ஒரு கப் ( சோனா மசூரி )

தேங்காய் - 3 துண்டு (சில்லு)

சீரகம் - ஒரு தேக்கரண்டி

இஞ்சி - சிறிய துண்டு

பூண்டு - ஒரு பல்

பச்சை மிளகாய் - 3

வெங்காயம் - ஒன்று

உப்பு - தேவையான அளவு

---------------------------

தாளிக்க :

---------------------------

எண்ணெய் - தேவையான அளவு

பட்டை - 2

பிரிஞ்சி இலை - 4

செய்முறை:

வெங்காயத்தை நீளமாக நறுக்கவும். பாலக் கீரையை கழுவி பொடியாக நறுக்கவும். தேங்காயுடன் சீரகம்

இஞ்சி பூண்டு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவற்றை சேர்த்து தாளித்து நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் அரைத்த தேங்காய் விழுதினை சேர்த்து கிளறவும்.

அதனுடன் நறுக்கிய கீரை மற்றும் நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

இந்த கலவையில் 2 கப் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதித்ததும் அரிசியை சேர்த்து மூடியிட்டு வேக விடவும்.

சுவையான பாலக் புலாவ் தயார். விரும்பிய கிரேவியுடன் பரிமாறவும்.

குறிப்புகள்: