பாலக் சாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சை அரிசி - அரை கப்

பசலை கீரை (பாலக்) - 2 கட்டு (சிறியது)

பச்சை மிளகாய் - 3

சின்ன வெங்காயம் - கால் கிலோ

தக்காளி நறுக்கியது - 3

காய்ந்த மிளகாய் - 7

பச்சை பட்டாணி - அரை கப்

மல்லி விதை - 2 தேக்கரண்டி

துருவிய தேங்காய் - 2 தேக்கரண்டி

முந்திரி - ஒரு தேக்கரண்டி

பிரிஞ்சி இலை - ஒன்று

பட்டை - ஒன்று

கிராம்பு - 2

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

செய்முறை:

அரிசியை வடித்து வைக்கவும். பட்டாணியை வேகவைத்து வைக்கவும்.

சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய் மற்றும் மல்லியை வறுத்தெடுக்கவும்.

எண்ணெய் இல்லாமல் கீரையை நறுக்காமல் வதக்கவும்.

வறுத்த மிளகாய், மல்லி விதை, முந்திரி, தேங்காய் மற்றும் கீரையை சேர்த்து அரைக்கவும்.

மீதமுள்ள எண்ணெயில் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு தாளித்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

பிறகு தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து அரைத்த கீரையும் சேர்த்து வதக்கவும்.

வேகவைத்த பட்டாணி சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு உப்பு சேர்த்து வடித்து வைத்துள்ள சாதத்தை கொட்டி கிளறவும். சுவையான பாலக் சாதம் தயார்.

குறிப்புகள்: