பாச்சோறு (1)
0
தேவையான பொருட்கள்:
அரிசி - 100 மில்லி
சீனி - 400 மில்லி
தேங்காய் - 1 சிறியது
முந்திரி - 10
பாதம் - 10
பிஸ்தா - 10
ஏலம் - 4
வெனிலா எஸன்ஸ் -1 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் அரிசியை சம அளவு தண்ணீர் ஊற்றி முக்கால் வேக்காடாக வேகவைத்துக்கொள்ளவும்
பின் அதில் தேங்காயை துருவி போட்டு 10 நிமிடம் மடங்கவிடவும் பின் சீனியைப்போட்டு கிளறவும்.
பாதம்,பிஸ்தா தோலை நீக்கி, பாதம், பிஸ்தா, முந்திரி மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்
பின் நறுக்கிய பருப்புகளை போட்டு எஸன்ஸ் சேர்த்து நன்கு வெந்ததும் இறக்கவும்.
குறிப்புகள்:
தேவையானால் அரிசியின் அளவைக்கூட்டியும் செய்யலாம்.
அரிசியின் அளவைக்கூட்டும் போது மற்ற எல்லா பொருள்களின் அளவையும் கூட்டிக்கொள்ளவும்
மேலே சில்வர் பேப்பர் போட்டு அலங்கரிக்கலாம்