பாசிப்யிறுபாத்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி - 1 கப்

பாசிப்பயிறு - கப்

வெங்காயம் - 50 கிராம்

பச்சை மிளகாய் - 2

சீரகம் - 2 தேக்கரண்டி

கரம் மசாலா பொடி - அரை தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

தேங்காய் - கால் மூடி

தனியாத் தூள் - கால் தேக்கரண்டி

எலுமிச்சைப்பழம் - அரை மூடி

முந்திரி - 6

எண்ணெய் - 50 மில்லி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும். பச்சைமிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் ஏற்றி எண்ணெய் காய்ந்ததும் சீரகம் போட்டு சிவந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

பின்பு பச்சை மிளகாய், கரம் மசாலா, மஞ்சள் தூள், தனியாத் தூள், முந்திரி சேர்த்து வதக்கவும்.

பாசிப்பயிறு, அரிசியை போட்டு 25 நிமிடங்கள் ஊறவிடவும்.

பின்பு உப்பு சேர்த்து அரிசி, பாசிப்பயிறு 15 நிமிடங்கள் வரை மூடி போட்டு வேக வைக்கவும் இறக்கிய பின்பு எலுமிச்சைப்பழ சாற்றை பிழியவும்.

குறிப்புகள்: