பழைய தயிர் சாதம்
தேவையான பொருட்கள்:
சாதம் - 3 கப்
------------------------------------
தாளிக்க தேவையானவை
------------------------------------------:
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பில்லை - 5 இலை
பச்சை மிளகாய் - 2 நீளமாக அரிந்தது
இஞ்சி - 1 சிறிய துண்டு பொடிதாக நறுக்கியது
செய்முறை:
நாம் எப்பொழுதும் சாதம் மீந்து விட்டால் அதில் தண்ணீர் ஊற்றி விடுவோம். அப்படி முன் தினம் இரவே தண்ணீர் ஊற்றி சாதத்தில் மறுநாள் காலையில் தயிருடன் சேர்த்து தாளிக்க போகிறோம் .
மறுநாள் காலையில் :
தண்ணீரில் இருந்து சாதத்தை வடிக்கட்டவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்த பின் அதில் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பில்லை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும் .
அதன் பின் அத்துடன் தயிர் மற்றும் உப்பு சேர்த்து பின் சாதத்துடன் சேர்த்து கிளறவும்.
மிகவும் குளிர்ச்சியான பழைய தயிர் சாதம் ரெடி.
குறிப்புகள்:
சாதம் நிறைய மீந்து விட்டால் அதில் தண்ணீர் ஊற்றி பழைய சோறாக சாப்பிடுவதை விட இப்படி தயிர் சாதம் செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். குளுமையும் கூட