பழையோதரை
தேவையான பொருட்கள்:
பழைய சாதம் - ஒரு கப்
புளி - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் - ஒன்று
------------------------
தாளிக்க:
--------------------------
கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, வரமிளகாய் - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். தாளிக்க வேண்டியவற்றை எடுத்து வைக்கவும். புளியுடன் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.
பழைய சாதத்தில் புளியை கரைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து குறைந்தது 15-20 நிமிடமாவது ஊற வைக்கவும். புளியை அதிக தண்ணீர் ஊற்றி கரைக்க வேண்டாம்.
வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்தவற்றை தாளிக்கவும்.
பின் நறுக்கின வெங்காயத்தை போட்டு பொன் நிறமாக மாறும் வரை வதக்கவும்.
பின் ஊற வைத்த சாதத்தை போட்டு புளி தண்ணீர் வற்றும் வரை மிதமான தீயில் வேக வைக்கவும். தண்ணீர் வற்றியதும் இறக்கவும்