பருப்பு சாதம் (3)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அரிசி அல்லது எந்த அரிசியும் -- 1 கப்

கடலை பருப்பு அல்லது துவரம் பருப்பு -- ஒரு கைப்பிடி

சிறிய வெங்காயம் - 1/2 கப் (நறுக்கியது)

தக்காளி - 1/2 கப் (நறுக்கியது)

பச்சை மிளகாய் - 3 என்னம் (நீளமாக கீறியது)

இஞ்சி,பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

சோம்பு - 1/2 டீஸ்பூன்

கிராம்பு - 3 என்னம்

பட்டை - 1 அங்குலம்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

சிவப்பு மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணைய் - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் எண்ணைய் ஊற்றி சோம்பு, பட்டை, கிராம்பு தாளித்து இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதங்கியவுடன்

வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி அரிசி,கடலை பருப்பு கழுவியதை போட்டு மஞ்சள்தூள், மிளகாய் தூள் போட்டு ஒரு கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு ஒரு கலக்கு கலக்கி அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் வைத்து இறக்கி பறிமாறவும்.

குறிப்புகள்: