பருப்பு சாதம் (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 100 கிராம்

பச்சரிசி (அ) புழுங்கலரிசி - 400 கிராம்

கடலைப்பருப்பு - 3 தேக்கரண்டி

உளுந்து - 2 தேக்கரண்டி

மிளகாய்ப்பொடி - ஒரு தேக்கரண்டி

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

மல்லித்தூள் - அரை தேக்கரண்டி

சாம்பார் பொடி - ஒரு தேக்கரண்டி

தேங்காய் - 2 சில்

பூண்டு - 5 பல்

சின்ன வெங்காயம் - 10

புளி - நெல்லிக்காய் அளவு

தக்காளி - 2

பச்சைமிளகாய் - 2

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

---------------------------

தாளிக்க:

---------------------------------

கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி

சீரகம் - அரை தேக்கரண்டி

பெருங்காயம் - ஒரு தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

செய்முறை:

குக்கரில் பருப்புகள் மூன்றையும் கழுவிப்போட்டு, மஞ்சள் தூள், தக்காளி ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து வேகவிடவும். அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும்.

தேங்காய், பூண்டு, 6 வெங்காயம் ஆகியவற்றை அரைத்து பருப்பில் போடவும். பருப்பு பாதி வெந்தவுடன் அரிசியை போட்டு, மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, சாம்பார் பொடி போட்டு புளித்தண்ணீருடன் 5 கிளாஸ் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வெந்தயம், பெருங்காயம் போட்டு பொரிந்தவுடன், 4 சின்ன வெங்காயத்தை நறுக்கி கறிவேப்பிலையுடன் சேர்த்து வதக்கி பருப்பில் கொட்டவும்.

உப்பு போட்டு கிளறி குக்கரை மூடி 3 விசில் வைத்து, 10 நிமிடம் சிறு தீயில் வைத்து இறக்கவும்.

குறிப்புகள்: