பருப்பு சாதம் (1)
தேவையான பொருட்கள்:
சாப்பாட்டு அரிசி - 1 கப்
துவரம்பருப்பு - 1/4 கப்
பாசிப்பயறு - 1 கைப்பிடி
சின்னவெங்காயம் - 10
தக்காளி - 1
பூண்டு - 5 பற்கள்
சீரகம் - 1/2 ஸ்பூன்
மிளகு - 1/4 ஸ்பூன்
சோம்பு - 1/4 ஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு
பட்டை -1
கிராம்பு - 1
காய்ந்த மிளகாய் - 2
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணை - 2 ஸ்பூன்
தண்ணீர் - 21/2 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசி ,துவரம்பருப்பு,பாசிப்பயறு ஆகியவற்றை 1/2மணி நேரம் ஊற வைக்கவும்.
வெங்காயம், பூண்டு தோலுரித்து வைக்கவும். தக்காளியை சிறிதாக நறுக்கி வைக்கவும்.
மிக்ஸியில் சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, மிளகு, காய்ந்தமிளகாய்,கறிவேப்பிலை, இஞ்சி ஆகியவற்றை பொடித்துவைக்கவும்.
குக்கரில் எண்ணை ஊற்றி பொடித்தவற்றை போட்டு, வெங்காயம்,பூண்டு போட்டு வதக்கவும்.
அதில் தக்காளி சேர்த்து வதக்கி,மஞ்சள்தூள் சேர்த்து, அரிசி பருப்பை போட்டு உப்பு போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 3விசில் வந்ததும் இறக்கவும்.தேவையானால் இறக்கியவுடன் 1ஸ்பூன் நெய் ஊற்றி கிளறி இறக்கவும்.
இத்ற்கு வெங்காயம், பூண்டு முழுதாக போட்டால் நன்றாக இருக்கும்.