பருப்பு அரிசி சாதம்
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி - ஒரு கப்
துவரம்பருப்பு - 3/4 கப்
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 2
வர மிளகாய் - 2
பூண்டு - 5 பல்
நறுக்கிய தேங்காய் பல் - அரை கப்
மிளகாய்தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
தக்காளி - 2
கத்திரிக்காய் - ஒன்று
உருளைக்கிழங்கு - ஒன்று
கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு - தாளிக்க தேவையான அளவு
பொடி செய்துக் கொள்ள:
மிளகு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
செய்முறை:
சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளியை நறுக்கவும். பச்சைமிளகாய், வரமிளகாயை கீறி வைக்கவும். கத்தரிக்காய், உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, தாளித்து வரமிளகாய், பச்சைமிளகாய், வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும். 4 கப் தண்ணீர் ஊற்றவும்
மிளகாய்தூள், மஞ்சள்தூள், நறுக்கிய தேங்காய் பல், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, உப்பு சேர்க்கவும்.
ஒரு கொதி வந்ததும் அரிசி பருப்பை போட்டு பொடி பண்ணி வைத்திருக்கும் மிளகு, சீரகம், சோம்பு பொடியை போட்டு குக்கரை மூடவும்.
குக்கரில் ஸ்டீம் வந்ததும் வெய்ட் போட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும். சரியாக 10 நிமிடம் கழித்ததும் அடுப்பை நிறுத்தி விடவும்.
குறிப்புகள்:
குழந்தை முதல் பெரியவர் வரை எல்லோரும் விரும்பி உண்ணும் உணவு இது. சாப்பிடும்போது ஒரு தேக்கரண்டி
நெய் ஊற்றி சாப்பிட வேண்டும். தொட்டுக்கொள்ள ஊறுகாய் போதும். மாங்காய் தொக்கு நல்ல மேட்சிங்.