பரங்கிக்காய் புலாவ்
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - ஒரு கப்
பெரிதாக நறுக்கிய பரங்கிக்காய் - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2 (காரத்திற்கு ஏற்ப சேர்க்கலாம்)
பூண்டு - 5 பல்
நெய் - 3 டேபிள்ஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ - தலா 2
பிரிஞ்சி இலை - 2
புதினா - சிறிதளவு
உப்பு - தேவைக்கு ஏற்ப
செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும். பாஸ்மதி அரிசியை கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும்.
குக்கரில் நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, பிரிஞ்சி இலை சேர்க்கவும்.
அவை பொரிந்து வரும்போது நறுக்கின வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.
பிறகு பரங்கிக்காய் துண்டுகளை சேர்த்து லேசாக வதக்கவும்.
அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கும் போது உப்பு மற்றும் ஊற வைத்த அரிசி சேர்க்கவும்.
தண்ணீர் நன்கு கொதித்து வரும் போது புதினா இலைகள் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.
ஆவி அடங்கியதும் குக்கரை திறந்து பார்த்தால் புலாவ் தயாராகி விடும்.