பனீர் க்ரீன் ரைஸ்
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி ரைஸ் - 1 கிலோ
பனீர் - 150 கிராம்
தேங்காய் - 1
பச்சை பட்டாணி - 100 கிராம் (ஃப்ரோஸன்)
சிறிய வெங்காயம் - 250 கிராம்
பச்சை மிளகாய் - 15
காலி ஃபிளவர் - 200 கிராம்
பூண்டு - 100 கிராம்
கொத்தமல்லி தழை - ஒரு கட்டு
இஞ்சி - ஒரு சிறு துண்டு
புதினா - இரண்டு கைப்பிடி அளவு
பீன்ஸ் - 50 கிராம்
ஏலக்காய் - 5 என்னம்
கிராம்பு - 8 என்னம்
பட்டாணி - 100 கிராம்
நெய் - 100 கிராம்
இலவங்கம் - ஒரு துண்டு
நல்லெண்ணை - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசியை நன்றாக களைந்து 30 நிமிடம் ஊறவைக்கவும்.
காய்களை எல்லாம் ஒரே அளவாக அரிந்து கொள்ளவும்
பச்சை மிளகாய்,வெங்காயத்தையும் நன்றாக தட்டி எடுக்கவும்.
இஞ்சி ,பூண்டு,இலவங்கப்பட்டை ஆகியவற்றை மை போல் அரைக்கவும்.
தேங்காயைத் துருவி பால் எடுக்கவும்.
புதினா, கொத்தமல்லி இலைகளை பொடி பொடியாக நறுக்கவும்.
வாயகன்ற பாத்திரத்தில் எண்ணை,நெய்யையும் ஊற்றவும்.
எண்ணை காய்ந்ததும் பட்டை,ஏலம்,கிராம்பு ஆகியவற்றை தட்டிப்போடவும்.
அதனுடன் அரைத்த பூண்டு, இஞ்சி, பட்டையையும் போட்டு கிளறவும்.
இவை நன்கு வதங்கியதும் தட்டிய வெங்காயம்,பச்சைமிளகாய்,மல்லி இலை,புதினா , ஆகியவற்றை போட்டு மேலும் வதக்கவும்.
இதனுடன் காய்கறியை போட்டு நன்றாக வதக்கவும்.
மேலும் தேங்காய் பாலுடன் இரண்டு லிட்டர் தண்ணீர் சேர்த்து ஊற்றி, கொதித்ததும் பனீர்,அரிசி,உப்பு போட்டு வெந்தவுடன் இறக்கி கிளறி பறிமாறவும்.