பத்தியக் கஞ்சி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி - கால் கப்

பாசிப்பயறு - 3 மேசைக்கரண்டி

வெந்தயம் - ஒரு தேக்கரண்டி

வெங்காயம் - பாதி

பூண்டு - 2 பற்கள்

மோர் - 1 அல்லது 1 1/2 கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பாசிப்பயறையும் வெந்தயத்தையும் முதல் நாள் இரவே ஊற வைக்கவும். புழுங்கல் அரிசியைக் களைந்து குழைவாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஊற வைத்த பாசிப்பயறையும் வெந்தயத்தையும் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்

பிறகு பாத்திரத்தில் அரை கப் தண்ணீர் ஊற்றி, வெங்காயம், பூண்டு, வேக வைத்த பாசிப்பயறு, வெந்தயம் மற்றும் உப்பு சேர்த்து வேகவிடவும்.

வெந்ததும் அதனுடன் குழைவாக வடித்த சாதத்தைச் சேர்த்துக் கிளறி ஆறவைக்கவும். ஆறியதும் மோர் கலந்து தேவையெனில் மேலும் சிறிது உப்பு சேர்த்துப் பரிமாறவும்.

குறிப்புகள்: