பதனி சாதம்
0
தேவையான பொருட்கள்:
பதனி - ஒரு லிட்டர்
அரிசி - அரைப் படி
துருவிய தேங்காய் - ஒன்று
எள்ளு - 50 கிராம்
செய்முறை:
எள்ளைப் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
பதனீரைக் கொதிக்க வைத்து கொள்ளவும். கொதி வர ஆரம்பித்தவுடன் அரிசியைக் களைந்து கொதிக்கும் பதனீரில் போடவும்.
சாதம் பதம் வருவதற்குள், துறுவிய தேங்காய், பொரித்த எள்ளு போட்டு கலந்து சிறிது நேரம் வேக விட்டு இறக்கவும்.