பட்டாணி புலாவ் (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அரிசி - ஒரு கப்

பட்டாணி - அரை கப்

வெங்காயம் - ஒன்று

தக்காளி - 3

உருளைக்கிழங்கு - 2

பிரியாணி இலை - 2

பட்டை - சிறியதுண்டு

கிராம்பு - 3

ஏலக்காய் - 2

மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி

கரம் மசாலாபொடி - ஒரு தேக்கரண்டி

வெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

---------------------------------------

அரைக்க:

----------------------------------------

புதினா - சிறிதளவு

கொத்தமல்லி இலை - சிறிதளவு

இஞ்சி - சிறிய துண்டு

வெங்காயம் - சிறிதளவு

பச்சைமிளகாய் - 2

செய்முறை:

அரிசியைக் களைந்து 10 நிமிடம் ஊறவைக்கவும். பட்டாணியை 6 மணி நேரம் ஊறவைக்கவும். உருளைக்கிழங்கை சதுரமாக நறுக்கிக் கொள்ளவும்.

அரைக்க குறிப்பிட்டுள்ள பொருட்களை சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.

குக்கரில் வெண்ணெய் போட்டு சூடானதும் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை போடவும்.

பின் அரைத்த விழுது, வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி, கரம் மசாலா பொடி போட்டு வதக்கவும்.

பின் ஊறவைத்த அரிசி, பட்டாணி, உருளைக்கிழங்கு, உப்பு, 2 1/2 கப் தண்ணீர் போட்டு நன்றாக கிளறி மூடவும்.

ஒரு விசில் வந்த பின் 10 நிமிடம் சிம்மில் வைத்து வேகவைக்கவும்.

குறிப்புகள்: