பட்டாணி புலாவ் (1)
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 1 கப்(நீரில் கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும்)
கேரட் - பாதி (பொடியாக நறுக்கியது)
பட்டாணி - 2 கைப்பிடி
வெங்காயம் - 1 என்னம் (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 1/2 என்னம் (பொடியாக நறுக்கியது)
பட்டை - 1 அங்குலம் அளவு
கிராம்பு - 4 என்னம்
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 3 சிட்டிகை
சிவப்பு மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
தனியா தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - ருசிக்கேற்ப
எண்ணைய் - தாளிக்க
செய்முறை:
வாணலியில் எண்ணைய் ஊற்றி பட்டை, கிராம்பு தாளித்து இஞ்சி, பூண்டு விழுது போட்டு ஒரு வதக்கு வதக்கி அதனுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
அதன் பின் கேரட், பட்டாணி சேர்த்து 2 நிமிடம் வதக்கி அதனுடன் தக்காளி போட்டு 2 நிமிடம் வதக்கி உப்பு போடவும்.
தக்காளி வெந்ததும் மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கி 3 நிமிடம் ஆன பிறகு ஒரு கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் வீதம் தண்ணீர் ஊற்றி அரிசியை போடவும்.
அரிசி வெந்ததும் இறக்கி நன்கு அரிசி உடையாமல் கிளறி பறிமாறவும்.
குறிப்புகள்:
இந்த புலாவ் நான் ரைஸ் குக்கரில் பண்ணினேன். பொல பொலவன வந்தது. ஒரு சீக்ரெட்:: ரைஸ் குக்கரில் எந்த சாதம் வைத்தாலும் தண்ணீர் கொதித்ததும் ரைஸ் போட்டு ஒரு கலக்கு கலக்கி மூடி விடவும்.
பின் வாம் மோட் வந்தபின் அணைத்து விடவும். 10 நிமிடத்திற்குப் பின் எடுத்து கலந்தால் உடையாத ரைஸ் கிடைக்கும்.