பட்டாணி புலாவ் மற்றமுறை
தேவையான பொருட்கள்:
எண்ணைய் - 2 ஸ்பூன்
நெய் - 2 ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பட்டை - 1அங்குலம் அளவு
கிராம்பு - 5 என்னம்
பிரியாணி இலை - 1 என்னம்
வெங்காயம் - 2 என்னம் (நீளமாக நறுக்கியது)
இஞ்சி - 1 அங்குலம் அளவு
பூண்டு - 5 பல்
பச்சை மிளகாய் - 3 என்னம் (காரத்திற்கேற்ப சேத்துக் கொள்ளவும்)
பட்டாணி - 3/4 கப்
தனியா பவுடர் - 3/4 டீஸ்பூன்
புலாவ்/ பிரியாணி மசாலா - 1 டீஸ்பூன்
அரிசி - 1 கப்
கொத்தமல்லி தழை - 3 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
புதினா இலை - ஒரு கைப்பிடி அளவு
செய்முறை:
அரிசியை கழுவி நெய்யில் வறுக்கவும். வறுத்தபின் 10 நிமிடம் ஊறவைக்கவும்.
இஞ்சி, பச்சைமிளகாய், பூண்டை நன்கு பேஸ்ட்டாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணைய், நெய் ஊற்றி சீரகம்,பட்டை,கிராம்பு, பிரியாணி இலை தாளித்து வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
பின் அரைத்த மசாலாவை ஊற்றி பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
வதக்கிய பிறகு பட்டாணியை சேர்த்து ஒரு வதக்கு வதக்கி தனியா தூள், பிரியாணி மசாலா சேர்த்து ஒரு கிளறு கிளறி உப்பு போடவும்.
பின் வறுத்து ஊற வைத்த அரிசியை சேர்த்து கிளறி ஒரு கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் வீதம் ஊற்றி கொத்தமல்லி,புதினா போட்டு கிளறி வேகவிடவும்.
வெந்தபின் சுவையான பட்டாணி புலாவ் ரெடி.
குறிப்புகள்:
பாஸ்மதி அரிசியை என்றால் கழுவ தேவையில்லை.அப்படியே நெய்யில் வறுத்து தேவையான தண்ணீர் ஊற்றி ஊறவைக்கலாம்.
ரைஸ் குக்கர் என்றால் அதிலேயே தாளித்து காய், அரிசியை போட்டு வேகவைத்து வாம் மோட் வந்ததும் குக்கரை ஆஃப் பண்ணி 10 நிமிடம் கழித்து கிளறி சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். நடுவில் கிளறுவதோ, கலக்குவதோ கூடாது.