பட்டாணி பாத் (1)
தேவையான பொருட்கள்:
அரிசி - 1/4 கிலோ
துவரம் பருப்பு - 150 கிராம்
கத்தரிக்காய் - 2
உருளைக்கிழங்கு - 1
கேரட் - 1
பச்சை பட்டாணி - 1 கப் (1/4 கிலோ)
புளி - ஒரு எழுமிச்சம் பழ அளவு
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப.
-------------------------------
வறுத்து பொடிக்க:
----------------------
காய்ந்த மிளகாய் - 6
தனியா - 2 தேக்கரண்டி
பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி
கசகசா - 1 தேக்கரண்டி
மராட்டி மொக்கு - 1
மிளகு - 1/2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் - 1 மேசைக்கரண்டி
-------------------
தாளிக்க:
-----------
கடுகு - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி தழை - சிறிது
பெருங்காயம் - சிறிது
நெய் - 3 ஸ்பூன்
எண்ணெய் - 3 ஸ்பூன்.
செய்முறை:
அரிசியையும் பருப்பையும் ஒன்றாக கலந்து கழுவி, ஒன்றுக்கு இரண்டரை மடங்கு தண்ணீர் வைத்து குக்கரில் 3 விசில் விட்டு குழைய வேக விட்டு எடுக்கவும்.
வெந்த சாதத்தை லேசாக மசிக்கவும்.
வறுக்கக் கொடுத்துள்ளவைகளை 1/2 ஸ்பூன் எண்ணெயில் வறுத்து பொடித்து வைக்கவும்.
புளியை 2 டம்ளர் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைக்கவும்.
வெங்காயம், தக்காளி, கத்தரிக்காயை பொடியாக நறுக்கவும்.
உருளைக்கிழங்கு, கேரட்டை தோல் சீவி, துருவி வைக்கவும்.
புளித்தண்ணீரில் உப்பு, எல்லா காய்களையும், பட்டாணியையும் சேர்த்து வேக விடவும்.
வெந்ததும் பொடித்த பொடியை சேர்த்து ஒரு கொதி விடவும்.
மசித்த சாதத்தை அதனுடன் சேர்த்து நன்கு கிளறவும். (சாதம் தளர இருக்க வேண்டும்)
வாணலியில் எண்ணெய், நெய் ஊற்றி, கடுகு, பெருங்காயம் தாளித்து, ஒரு கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி சாதத்தில் கொட்டி கிளறவும்.
கொத்தமல்லி தூவி இறக்கவும்.