பட்டாணி சாதம்
தேவையான பொருட்கள்:
பொன்னி அரிசி - 250 கிராம்
பட்டாணி - 150 கிராம்
தேங்காய்ப்பால் - 2 கப்
இஞ்சி,பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
நெய் அல்லது வெண்ணெய் - தேவையான அளவு
சோம்பு - சிறிதளவு
ஏலம், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் அரிசியை நன்றாக கழுவ வேண்டும்.அரிசியை ஊற வைக்கக் கூடாது.அடுப்பில் வாணலியை வைத்து சிறிது நெய்யை விட்டு, காய்ந்தவுடன் அதில் ஏலம்,பட்டை,கிராம்பு,பிரியாணி இலை ஆகியவற்றை போட்டுபிறகு அதில் பட்டாணியையும் சேர்த்து நன்கு கிளற வேண்டும். சிறிது நேரம் கழித்து அரிசியையும் போட்டு கடைசியில் இஞ்சி, பூண்டு விழுதை சேர்க்க வேண்டும்.
எல்லாம் நன்றாக வதங்கிய பிறகு, அப்படியே குக்கருக்கு மாற்றி தேங்காய்ப் பாலையும் தண்ணீரையும் சரியான விகிதத்தில் கலந்து சிறிது நெய்யையும் ஊற்றி குக்கரை மூடி விட வேண்டும். ஆவி வந்த பிறகு அடுப்பை சிறியதாக வைத்து 15 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்.
சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து மேலே சிறிது நெய்யை ஊற்றி நன்றாக சாதம் உடையாமல் கிளறி பரிமாறவும்
குறிப்புகள்:
பார்ட்டிகளில் அதிக கொழுப்பில்லாத சத்தான சுவையான சாதம்.