பச்சைநிற புலாவ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - அரைக்கிலோ

வெங்காயம் - இரண்டு

பச்சைநிற தக்காளி - இரண்டு

பச்சைமிளகாய் - ஆறு

பச்சைநிற காய்கறிகள் - அரைக்கிலோ

இஞ்சிவிழுது - அரை தேக்கரண்டி

பூண்டுவிழுது - அரை தேக்கரண்டி

கொத்தமல்லி - ஒரு பிடி

எண்ணெய் - கால் கோப்பை

நெய் - ஒரு மேசைக்கரண்டி

எலுமிச்சைரசம் - ஒரு மேசைக்கரண்டி

பட்டை - ஒரு துண்டு

இலவங்கம் - நான்கு

ஏலக்காய் - நான்கு

பிரிஞ்சி இலை - இரண்டு

உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி

செய்முறை:

பச்சரிசியை கழுவி வைத்து மற்ற பொருட்களை தயாரிக்கும் வரை ஊறவைக்கவும்.

வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளியை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.

பிடித்தமான பச்சைநிற காய்கறிகளை (பீன்ஸ், பச்சைபட்டாணி, அவரை, ப்ரோக்கலி, அஸ்பரகஸ், ஸ்னோ பீஸ்) ஒரே அளவாக நறுக்கி கொள்ளவும்.

முதலில் அரிசியை கொதிக்கும் நீரில் போட்டு அரைவேக்காடாக வடித்து கொள்ளவும்.

பிறகு அடிகனமான சட்டியில் எண்ணெயை காயவைத்து வாசனைப் பொருட்களை போடவும்.

பிறகு வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் வெந்தவுடன் இஞ்சி, பூண்டு பச்சைமிளகாயைப் போட்டு வதக்கவும். அடிபிடிக்காதவாறு சிறிது நீரைத்தெளித்து வதக்கவும்.

பிறகு தக்காளியுடன் மற்ற எல்லாக் காய்கறிகளைப் போட்டு எலுமிச்சைரசத்தை ஊற்றி உப்பையும் சேர்த்து நன்கு கிளறி விடவும். தொடர்ந்து இரண்டு கோப்பை தண்ணீரை ஊற்றி மூடியைப்போட்டு கொதிக்கவிடவும்.

நன்கு கொதித்தவுடன் வேகவைத்த அரிசியைக் கொட்டி கிளறி விட்டு மூடியைப்போட்டு அடுப்பை குறைந்த அனலில் வைத்து விடவும்.

பத்து நிமிடம் கழித்து நெய்யை மேலாக ஊற்றி நன்கு கிளறி விடவும். பரிமாறும் பாத்திரத்தில் கொட்டி கொத்தமல்லியை தூவி அலங்கரித்து சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்: