பகாறா கானா (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பிரியாணி அரிசி - நாலு கப்

எண்ணெய் - அரை கப்

டால்டா - இரண்டு தேக்கரண்டி

பட்டை, லவங்கம், ஏலம் - தலா இரண்டு இரண்டு

பெரிய வெங்காயம் - இரண்டு

இஞ்சி பூண்டு பேஸ்ட் - நான்கு தேக்கரண்டி

கொத்தமல்லி தழை - அரை கட்டு

புதினா - கால் கட்டு

தயிர் - கால் கப்

பச்சை மிளகாய் - ஐந்து

செய்முறை:

சட்டியை காயவைத்து எண்ணெயையும், டால்டாவும் ஊற்றி அதில் பட்டை, லவங்கம், ஏலம் போட்டு தாளிக்கவும். அதில் வெங்காயத்தை நீளமாக நறுக்கி போட்டு வதக்கவும்.

வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு அதிகம் சிவந்து விடாமல் வதக்கவும்.

பிறகு கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய், தயிர் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கி ஒரு கப் அரிசிக்கு 1 1/2 கப் வீதம் தண்ணீர் ஊற்றவும்.

தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்கும் போது அரிசியை தட்டி நன்றாக கொதிக்கவிட்டு தீயை சிம்மில் வைத்து தம்மில் விட்டு இறக்கவும்.

குறிப்புகள்:

இஸ்லாமிய இல்லங்களில் ஒரு விஷேசம் என்றால் பகார கானா, கறி உருளை கிழங்கு சால்னா, தால்சா, மட்டன் ப்ரை (அ) மட்டன் கூட்டு, வெங்காய முட்டை, அப்பளம், ஏதாவது இரு வகை ஸ்வீட். இதற்கு தொட்டுக்கொள்ள, கறி உருளை சால்னா,தால்சா, சிக்கன் ப்ரையுடன் பரிமாறவும்.

மீன் குழம்பும் இதற்கு சூப்பரான காம்பினேஷன். இதை குக்கரிலும், எலக்ட்ரிக் குக்கரிலும் செய்தால் நிமிஷத்தில் பகாறா கானா ரெடி.