நோன்பு கஞ்சி (ரமலான்)
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி நொய் - ஒரு கப்
பச்ச பருப்பு - கால் கப் (லேசாக வறுத்தது)
கீமா - நூறு கிராம்
எண்ணெய் - இரண்டு தேக்கரண்டி
டால்டா - கால் தேக்கரன்டி
பட்டை, ஏலம், கிராம்பு - தலா ஒன்று
வெங்காயம் - இரண்டு
தக்காளி - ஒன்று
பச்சை மிளகாய் - ஒன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி - கொஞ்சம்
புதினா - ஐந்து இலைகள்
மஞ்சள் தூள் - ஒரு பின்ச்
பொடியாக நறுக்கின கேரட் - ஒன்று
தேங்காய் பால் - கால் கப்
செய்முறை:
நொய்யையும், வறுத்த பச்ச பருப்பையும் அரை மணிநேரம் முன்பு ஊற வைக்கவும்.
குக்கரை காய வைத்து பட்டை, ஏலம், கிராம்பு போட்டு வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வதங்கியது இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்ச வாசனை போகும் வரை வதக்கி கொத்தமல்லி புதினா சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து கீமா, கேரட், தக்காளி, பச்சை மிளகாய், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நல்ல வதக்கி இரண்டு நிமிடம் சிம்மில் வேக விடவும்.
வெந்ததும் ஐந்து கப் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் மூடி போட்டு தீயை குறைத்து வைத்து மூன்றாவது விசில் வரும் போது அடுப்பை அனைக்கவும்.
பிறகு ஆவி அடங்கியதும் தேங்காய் பால் ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கவும்.
குறிப்புகள்:
நோன்பு காலங்களில் இஸ்லாமிய இல்லங்களில் செய்யக்கூடிய பல வகை கஞ்சிகளில் இதுவும் ஒரு வகையாகும்.
நோன்பு காலங்களிலும் செய்யலாம், மற்ற நாட்களிலும் செய்யலாம். வயிற்றுக்கு இதமாக இருக்கும். இந்த கஞ்சிக்கு பக்கோடா சூப்பராக இருக்கும். மசால் வடை, பஜ்ஜி, சிக்கன் பஜ்ஜி போன்றவையும் நல்லா இருக்கும்.