நெல்லிக்காய் ரைஸ் வித் சீனிக்கிழங்கு சிப்ஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நெல்லிக்காய் – 5

நல்லெண்ணெய் – 2 மேசைக்கரண்டி

கடுகு - கால் தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி

கடலைபருப்பு - ஒரு தேக்கரண்டி

கறிவேப்பிலை - ஒரு கொத்து

உப்பு - தேவையான அளவு

--------------------------------------------

சிப்ஸ் செய்ய தேவையானவை:

---------------------------------------------

சீனிக்கிழங்கு – ஒன்று

மிளகாய்த்தூள் - அரை தேக்கரண்டி

உப்பு - தேவைக்கு

எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி

செய்முறை:

நெல்லிக்காயை விதையை நீக்கி விட்டு மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் விழுதாக அரைக்கவும்.

அரைத்த விழுதை வடிகட்டியில் போட்டு வடிகட்டி சாறு எடுக்கவும்.

வடிகட்டி வைத்திருக்கும் சாறுடன் மஞ்சள் தூள்

உப்பு கலந்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து உளுத்தம் பருப்பு கடலை பருப்பு போட்டு வறுத்து அதில் இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் துண்டுகளை போடவும்.

பின்னர் அதில் நெல்லிக்காய் சாறை ஊற்றி லேசாக நுரை வந்ததும் இறக்கவும்.

ஒரு பாத்திரத்தில் ஆற வைத்து உதிர்த்த சாதத்தை போட்டு நெல்லிகாய் சாறை ஊற்றி கிளறவும். நெல்லிக்காய் சாதம் ரெடி.

சிப்ஸ் செய்யும் முறை: கிழங்கை மெல்லிய வட்ட வில்லைகளாக நறுக்கிக் கொள்ளவும்.

அதில் எண்ணெய், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பிசறி ஒரு மைக்ரோவேவ் தட்டில் போட்டு பரத்தி 3 நிமிடங்கள் மைக்ரோவேவ் ஹையில் வைக்கவும்.

பின் வெளியிலெடுத்து திருப்பி விட்டு மீண்டும் 3 நிமிடங்கள் மைக்ரோஹையில் வைத்து எடுக்கவும். சுவையான கிரிஸ்பி சீனிக்கிழங்கு சிப்ஸ் ரெடி

குறிப்புகள்:

நெல்லிக்காய் சாதத்துடன் சீனிக்கிழங்கு சிப்ஸ் சாப்பிட மிகவும் பொருத்தமாகவும் சுவையாகவும் இருக்கும்.