நெல்லிக்காய் சாதம் (1)
தேவையான பொருட்கள்:
சின்ன நெல்லிக்காய் - கால் கிலோ
அரிசி - அரை கிலோ
பச்சைமிளகாய் - 8
நல்லெண்ணெய் - 100 கிராம்
எண்ணெய் - 150 கிராம்
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு தேக்கரண்டி
கடுகு - தாளிப்பதற்கு
கடலைப்பருப்பு - தாளிப்பதற்கு
இஞ்சி - தாளிப்பதற்கு
கறிவேப்பிலை - தாளிப்பதற்கு
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
நெல்லிக்காய்களைக் கழுவி விதைகளை நீக்கி விட்டு அரைத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, பெருங்காயம், மஞ்சள் தூள், இஞ்சி, பச்சைமிளகாய் தாளித்து அத்துடன் அரைத்த நெல்லிக்காய் விழுதை கலந்து உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
வதங்கியவுடன் வெந்தயத்தை இலேசாக வறுத்து பொடி பண்ணி போடவும்.
சாதத்தை சரியான பதத்தில் வடித்து நல்லெண்ணெய் சேர்த்து ஆறவிடவும்.
ஆறியவுடன் நெல்லிக்காய் மசாலாவை சேர்த்து கிளற வேண்டும்.