நெல்லிக்காய் சாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பெரிய நெல்லிக்காய் - 3

வெங்காயம் - ஒன்று

தக்காளி - ஒன்று

பச்சை மிளகாய் - 3

கடுகு - ஒருஸ்பூன்

உளுத்தம்பருப்பு - ஒருஸ்பூன்

பெருங்காயம் - சிறிதளவு

மஞ்சபொடி - ஒருஸ்பூன்

கொத்துமல்லித்தழை - ஒருகைப்பிடி

அரிசி - 2 கப்

எண்ணெய் - ஒருகுழிக்கரண்டி

உப்பு - தேவையான அலவு

செய்முறை:

குக்கரில் சாதத்தை உதிராக வடித்துக்கொள்ளவும்.

நெல்லிக்காயைகொட்டை நீக்கி உப்புமிளகாய் சேர்த்து மிக்சியில் நைசாக அரைக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து பெருங்காயம் தாளித்து, நறுக்கிய வெங்காயம்,தக்காளிசேர்த்து சுருள வதக்கவும்.

அத்துடன் அரைத்து வைத்திருக்கும் நெல்லிக்காய் விழுதும் சேர்த்து மேலும் சிறிது எண்ணெய் ஊற்றி சுருளவதக்கி அதனுடன் வெந்த சாதம் போட்டு நன்கு கிளறவும்.சூடாகப்பரிமாறவும்.

குறிப்புகள்: