நெய் சோறு (3)
தேவையான பொருட்கள்:
பெரிய தேங்காய் - ஒன்று
அரிசி - 4 கப்
ஏலக்காய் - 4 அல்லது 5
கிராம்பு - 3
பட்டை - 2 துண்டு
முந்திரி - ஒரு கை பிடி
கிஸ்மிஸ் - பாதி கை பிடி
நெய் - 5 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அரிசியை தண்ணீர் ஊற்றி களைந்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
தேங்காயை துருவி எடுத்துக் கொண்டு அதை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து 2 அல்லது 3 முறை அரைத்து 8 அல்லது 9 கப் தண்ணீர் கலந்த பால் எடுத்துக் கொள்ளவும்.
சுத்தம் செய்து கழுவி வைத்திருக்கும் அரிசியுடன் தேங்காய் பாலை ஊற்றவும்.
வாணலியில் நெய்யை ஊற்றி காய்ந்ததும் ஏலக்காய், கிராம்பு, பட்டை போட்டு தாளித்து எடுத்துக் கொள்ளவும்.
தாளித்தவற்றை அரிசி மற்றும் தேங்காய் பால் கலவையுடன் கொட்டி கிளறி விடவும்.
அதன் பிறகு இந்த கலவையுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கி விடவும்.
இதை பாத்திரத்துடன் எடுத்து ரைஸ் குக்கரில் வைத்து கொதிக்க விடவும். ஒரு கொதி வந்ததும் கிஸ்மிஸ், முந்திரியை போட்டு மூடி விடவும். சாதம் வெந்ததும் திறந்து கரண்டியால் கிளறி விட்டு சூடாக பரிமாறவும்.