நெய் சோறு (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நெய் - விருப்பமான அளவு (கொஞ்சம் அதிகமாவே தேவை )

பாஸ்மதி ரைஸ் - ஒரு டம்ளர் (15 நிமிடம் ஊற வைக்கவும்.)

பால் - 2 டம்ளர் (ஆவின் பால்)

பச்சை பட்டாணி - 100 கிராம்

மீல்மேக்கர் -100 கிராம்

பொடியாக நறுக்கிய பூண்டு -3 பல்

பொடியாக நறுக்கிய இஞ்சி - கொஞ்சம்

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 1

பச்சை கொத்தமல்லி - கொஞ்சம்

உப்பு - தேவையான அளவு

--------------------

தாளிக்க:

--------------------

பட்டை - 2

கிராம்பு - 2

பிரிஞ்சி இலை - 1

ஏலக்காய் - 1

செய்முறை:

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை கீறி வைக்கவும்.

குக்கரில் நெய் விட்டு தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து இஞ்சி பூண்டு, பச்சை மிளகாய், பச்சை கொத்தமல்லி, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கியதும் 2 டம்ளர் பாலை சேர்க்கவும்.

பின் பட்டாணி, மீல் மேக்கர் மற்றும் உப்பு சேர்க்கவும். அடுத்து பாஸ்தி அரிசி சேர்த்து நன்றாக கிளறவும். நெய் கொஞ்சம் சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் வந்ததும் நிறுத்தவும்.

குறிப்புகள்: