நெய் சோறு (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பாஸ்மதி அல்லது சீரகசம்பா - அரை கிலோ

நெய் - 3 மேசைக்கரண்டி

வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - 2

பட்டை - ஒன்று

முந்திரி - 15

கொத்தமல்லி, புதினா - அரை கப்

ஏலக்காய் - 3

கிராம்பு - 2

அன்னாசிப்பூ - 2

இஞ்சி பூண்டு விழுது - 4 தேக்கரண்டி

செய்முறை:

அரிசியை களைந்து ஊற வைக்கவும்.

அதற்குள் வேறு ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு முந்திரி, பட்டை, ஏலக்காய், லவங்கம் போட்டு வறுக்கவும்.

பின்னர் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து பொன்னிறமானதும் கொத்தமல்லி தழை, புதினா சேர்க்கவும்.

அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அடிப்பிடிக்காமல் வதக்கவும்.

பின் தேவைக்கு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.

அதில் அரிசியை சேர்த்து கொதிக்க விடவும்.

தண்ணீர் பாதி வற்றியதும் அடுப்பை மிதமாக வைத்து 15 நிமிடங்கள் தம்மில் போடவும்.

குறிப்புகள்:

ரைத்தா, தாளிச்சா கிரேவிகளுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.