நெய் சோறு
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 2 கப்
வெங்காயம் - ஒன்று
பான்டன் இலை - ஒரு துண்டு
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
தயிர் - 2 தேக்கரண்டி
மல்லித் தழை - சிறிது
நெய் (அ) வெண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
தண்ணீர் - 3 கப்
---------------
தாளிக்க:
-----------------
பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ - தலா ஒன்று
செய்முறை:
வெங்காயத்தை நீளவாட்டில் நறுக்கிக் கொள்ளவும். மல்லித் தழையை சுத்தம் செய்து வைக்கவும். மற்ற தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் நெய் (அ) வெண்ணெயை உருக்கி அதில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளிக்கவும்.
தாளித்தவற்றுடன் வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பிறகு இஞ்சி பூண்டு விழுது, தயிர் மற்றும் மல்லித் தழை சேர்த்து வதக்கவும்.
அரிசியைக் களைந்து ரைஸ் குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி உப்பு போடவும். அதனுடன் தாளித்தவற்றைச் சேர்த்து குக்கரை மூடி ஆன் செய்யவும்.
கொதிக்கும் போது இடையில் ஒரு முறை குக்கரைத் திறந்து கிளறிவிடவும். பிறகு மூடி போட்டு மீண்டும் வேகவிடவும். குக்கர் வாமில் வந்ததும் சிறிது நேரம் அதிலேயே வைத்திருந்து எடுக்கவும். கமகம நெய் சோறு ரெடி.