நெய் சாதம் (1)
0
தேவையான பொருட்கள்:
பிரியாணி அரிசி - கால் கிலோ
பெரிய வெங்காயம் - 2
பட்டை - சிறிது
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
முந்திரி - 5
நெய் - 100 கிராம்
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
அரிசியை கழுவி, அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
அடி கெட்டியான பாத்திரத்தில் நெய்யை ஊற்றி, பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.
நீளமாக நறுக்கிய வெங்காயம், முந்திரி சேர்த்து வதக்கவும்.
அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
கொதிக்கும் போது அரிசியை சேர்த்து வேக விடவும்.
முக்கால் பதம் வெந்ததும் உப்பு சேர்த்து, அடுப்பை சிம்மில் வைக்கவும்.
அரிசி முழுதும் வெந்ததும் 10 நிமிடம் தம்மில் வைத்து இறக்கவும்.
குறிப்புகள்:
தொட்டுக்கொள்ள சிக்கன் குருமா, மட்டன் குருமா, உருளைக்கிழங்கு-பட்டாணி குருமா நன்றாக இருக்கும்.