நிலக்கடலை சாதம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நிலக்கடலை - ஒரு கைப்பிடி

சாதம் - ஒரு கப்

வெங்காயம் - 3

தக்காளி - 3

பச்சைமிளகாய் - 4

-------------

தாளிக்க:

------------

கடுகு, உளுந்து, சீரகம், கடலைபருப்பு - தாளிக்க

வெள்ளைபூண்டு - 8

வெங்காயம் - ஒன்று

செய்முறை:

வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் ஆகியவற்றை நடுத்தரமாக வெட்டி நீரில் சேர்த்து நீர் கொதிக்க விடவும்.

நீர் வற்றும் வரை வேகவிட்டு பின் ஆற வைக்கவும்.

அதற்குள் நிலக்கடலையை வெறும் சட்டியில் வறுத்து தோலுரித்துக் கொள்ளவும்.

இரண்டையும் மையாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக தாளிக்கவும்.

பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

அரைத்த விழுதை கொட்டி உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.

பின்னர் அடுப்பை அணைத்து ஆற விடவும். உதிரியாய் வடித்த சாதத்தை ஆற வைத்து அதில் சேர்த்து கிளறவும்

குறிப்புகள்:

வெள்ளைபூண்டு ஊறுகாய் மற்றும் சிப்ஸ் உடன் சாப்பிட அருமையாக இருக்கும். இந்த பேஸ்ட்டை பிரிட்ஜில் வைத்துக் கொண்டு அவ்வப்போது உடனடி சாதம் தயாரிக்கலாம். தாளிக்காமல் அப்படியே கூட சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.