நிம்ம அன்னம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வடித்த பச்சரிசி சாதம் - ஒரு கப்

வெங்காயம் - பாதி

பச்சை மிளகாய் - 2

காய்ந்த மிளகாய் - 2

இஞ்சி - சிறு துண்டு

கடுகு, சீரகம் - தாளிக்க

உளுந்து, கடலை பருப்பு, முந்திரி, வேர்க்கடலை - தேவைக்கு ஏற்ப

உப்பு, மஞ்சள் தூள் - தேவைக்கு ஏற்ப

எண்ணெய், நெய் - தேவைக்கு ஏற்ப

எலுமிச்சை சாறு - தேவைக்கு ஏற்ப

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை:

சாதத்தை சிறிது எண்ணெய், நெய், உப்பு சேர்த்து கலந்து ஆற விடவும். வெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

எலுமிச்சை சாறு\, சிறிது நீர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.

வாணலியில் எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, இஞ்சி, பருப்பு வகைகள், வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் எலுமிச்சை சாறை சேர்த்து கொதிக்க விட்டு சுண்ட விடவும்.

அடுப்பை சிறுதீயில் வைத்து ஆற வைத்துள்ள சாதத்தை சேர்க்கவும்.

நன்கு கலந்து விட்டு கொத்தமல்லி தூவி கிளறவும்.

குறிப்புகள்: