நாசி லெமாக்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தாய்லாந்து அரிசி - 1 கப்

தேங்காய் பால் - 1 1/2 கப்

டாவுன் பண்டான் (ரம்பை இலை) - 3

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ரம்பை இலைகளை வெட்டாமல் மொத்தமாக கட்டவும்.

எல்லா பொருட்களையும் கலந்து ரைஸ் குக்கரில் சமைக்கவும்.

சமைத்ததும் ரம்பை இலைகளை எடுத்து விட்டு பரிமாறவும்.

குறிப்புகள்:

இது சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியாவில் மிக பிரபலம். எனது குறிப்பிலுள்ள நெத்திலி கருவாடு சம்பால் இதற்கு ஏற்ற சைட் டிஷ்.

மீன் வறுவல் அல்லது கோழி பொரியல் சேர்த்தும் சாப்பிடலாம்.