நாசி கோரேங்
தேவையான பொருட்கள்:
உதிரியாக வடித்த சாதம் - 1 கப் (பச்சரிசி சாதம்)
பூண்டு - 4 பல்
பச்சைமிளகாய் - 1 (அல்லது) பழுத்தமிளகாய் - 1
முட்டை - 1
வெங்காயத்தாள் - 1
கேரட், முட்டைகோஸ், பீன்ஸ் - 1/4கப் (பொடியாக அரிந்தது)
உப்பு - 1/4 தேக்கரண்டி
சோயாசாஸ் - 1 தேக்கரண்டி
சர்க்கரை - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
பூண்டு பச்சை மிளகாய் அல்லது பழுத்தமிளகாய் சேர்த்து லேசாக இடித்து வைக்கவும்.
வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு முட்டையை ஊற்றி கிளறி எடுத்து தனியே வைக்கவும்.
அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெய் விட்டு சூடானதூம் இடித்த கலவையை போட்டு 1நிமிடம் வதக்கவும்
பொடியாக அரிந்த காய்கள், உப்பு, சர்க்கரை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
கிளறிய முட்டை,உதிரியாக வடித்து ஆறிய சாதம் சேர்க்கவும்.
சோயாசாஸ் சேர்த்து 3 நிமிடம் கிளறி வெங்காயத்தாள் சேர்த்து இறக்கவும்.
குறிப்புகள்:
மீதமுள்ள பொரித்த கோழித்துண்டுகளை எலும்பு நீக்கி சேர்க்கலாம்.
ஃபிஷ் பால் ஃபிஷ் கேக் கிடைத்தால் ஸ்லைஸ் செய்து காய் வதக்கும் போது சேர்க்கலாம்.
வேகவைத்த இறால்,வேகவைத்த நண்டின் சதைப்பகுதி சேர்க்கலாம்.
.முந்தைய நாள் மீதிவரும் சாதத்தை ஃப்ரிட்ஜில் வைத்து அடுத்த நாள் சாதத்தை ரீஹீட் செய்யாமல் குளிராக இருக்கும் போதே இதை செய்தால் நன்றாக வரும். தென்கிழக்காசிய நாடுகளில் பிரபலமான உணவு. மீதமான சாதத்தை கொண்டு செய்யப்படும் ஃப்ரைட் ரைஸ் தான் நாசி கோரேங்.