நாசி கோரி
தேவையான பொருட்கள்:
அரிசி - 200 கிராம்
முட்டை - 2
பெரிய வெங்காயம் - ஒன்று
பூண்டு - 10 பல்
இஞ்சி - ஒரு துண்டு
பச்சை மிளகாய் - 4
எண்ணெய் - தாளிப்பதற்கு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
செய்முறை:
அரிசியை வடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
வெங்காயம், பச்சை மிளகாய் சிறிதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெயை ஊற்றி இஞ்சி, பூண்டு விழுதை வதக்கி தனியாக எடுத்துவைக்கவும்.
பிறகு சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி வதக்கி விழுதை போட்டு பிறகு முட்டையை உடைத்து ஊற்றி பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் சாதத்தை எடுத்து அதில் முட்டை பொரியலை போட்டு தேவையான உப்பு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் போட்டு கிளற வேண்டும்.