நட்ஸ் புலாவ்
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - ஒரு கப்
நீளமாக நறுக்கிய வெங்காயம் - அரை கப்
கீறிய பச்சைமிளகாய் - 2 அல்லது 3
இஞ்சி, பூண்டு விழுது - அரை தேக்கரண்டி
பச்சை பட்டாணி - கால் கப்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2
பிரிஞ்சி இலை - ஒன்று
வறுத்த முந்திரி - ஒரு மேசைக்கரண்டி
வறுத்த பாதாம் - ஒரு மேசைக்கரண்டி
வறுத்த பிஸ்தா - ஒரு மேசைக்கரண்டி
கொத்தமல்லி இலை - சிறிதளவு
நெய் - 2 தேக்கரண்டி
தண்ணீர் - 1 1/2 கப்
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
அரிசியைக் கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் பிரிஞ்சி இலை, பட்டை, ஏலக்காய் மற்றும் கிராம்பை போடவும்.
பின் வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் அரிசியை போட்டு 2 நிமிடம் வறுக்கவும்.
பின் தண்ணீர், பச்சைபட்டாணி, உப்பு போட்டு 10 - 15 நிமிடம் குறைந்த அனலில் வேகவிடவும்.
வெந்த பின் நெய், கொத்தமல்லி இலை, முந்திரி, பிஸ்தா, பாதாம் தூவி அலங்கரித்து பரிமாறவும்.