தேங்காய் பூ சாதம்
1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
சாதம் - 1 1/2 கப் ( உதிரியாக வடித்து கொள்ளவும்)
தேஙகாய் துருவல் - ஒரு கப்
எண்ணெய் - மூன்று தேக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - ஒரு தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு - ஐந்து (பொடியாக நறுக்கி கொள்ளவும்)
கறிவேப்பிலை - ஐந்து கொத்து
பச்சை மிளகாய் - இரண்டு
இஞ்சி - ஒரு மேசைக்கரண்டி
செய்முறை:
எண்ணெயை காய வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, முந்திரிப்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை தாளிக்கவும். அதில் இஞ்சி துருவல், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், கறிவேப்பிலை எல்லாம் சேர்த்து தேங்காய் துருவலையும் சேர்த்து வதக்கவும்.
வதக்கியவைகளை சாதத்தில் கலந்து, நெய், கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
குறிப்புகள்:
இதற்கு பெப்பர் பீஸ் மசாலா செய்து சாப்பிடுங்கள்.