தேங்காய் பால் சாதம் (6)
தேவையான பொருட்கள்:
பிரியாணி அரிசி - ஒரு கிலோ
தேங்காய் - 3
பெரிய வெங்காயம் - கால் கிலோ
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
புதினா - சிறிது
பூண்டு - 50 கிராம்
இஞ்சி - ஒரு துண்டு
பட்டை - சிறு துண்டு
கிராம்பு - 2
நெய் - 50 கிராம்
டால்டா - 50 கிராம்
முந்திரி - 25 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பாதி பூண்டு, இஞ்சியை சேர்த்து அரைத்து கொள்ளவும்.
அடுப்பில் குக்கரை வைத்து டால்டா விட்டு பட்டை, கிராம்பு போட்டு சிவந்ததும் அரிந்து வைத்துள்ள வெங்காயம், உரித்த பூண்டு, புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு வதக்கவும்.
பிறகு இஞ்சி, பூண்டு அரைத்த விழுது, முந்திரி போட்டு வதக்கவும்.
வதங்கியதும் 3 தேங்காயில் இருந்து எடுத்த பாலை இரண்டு லிட்டர் சேர்க்கவும்.
தேவையான அளவு உப்பு போட்டு தேங்காய் பால் கொதித்ததும் அரிசி சேர்த்து குக்கர் வெயிட்டை போட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும்.
கால் மணி நேரம் ஆனதும் குக்கரை இறக்கி அதில் நெய்யை சேர்க்கவும்.